;
Athirady Tamil News

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 71 சதவிகிதம் அதிகரிப்பு..!!

0

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, கடந்த ஜூலை 31-ந் தேதியை கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்திருந்தது. இதையடுத்து, ஆகஸ்ட் 31-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்தக் கால அவகாசமும் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், இதுவரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையை வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

இதில், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 71 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஆன்லைன் மூலமாக 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 3.17 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்த நிலையில், நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 5.42 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*