;
Athirady Tamil News

நக்சலைட்கள் குண்டுவீச்சு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு..!!

0

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்துக்குட்பட்ட கேர்லாபால் அருகேயுள்ள ரப்டிப்பாரா கிராமத்தில் சில நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுக்மா மாவட்டத்தை ரிசர்வ் படையினர் அந்த கிராமத்தை இன்று முற்றுகையிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இன்று பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்கள் மீது நக்சலைட்கள் அதிநவீன் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களில் ஒரு வீரர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 6 =

*