;
Athirady Tamil News

ஹரிகிருஷ்ணா உடலுடன் செல்பி எடுத்த மருத்துவமனை ஊழியர்கள் பணிநீக்கம்.!!

0

ஆந்திர முன்னாள் முதல் மந்திரி என்.டி ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா கடந்த 29-ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் ஐதராபாத்தில் உள்ள காமினேனி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், காமினேனி மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள், ஹரிகிருஷ்ணாவின் உடலுடன் செல்பி எடுத்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஊழியர்கள் எடுத்த செல்பி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவிய நிலையில், அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன.

இதையடுத்து செல்பி எடுத்த 2 மருத்துவ உதவியாளர்கள் மற்றும் 2 நர்சுகளை மருத்துவமனை நிர்வாகம் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 2 =

*