;
Athirady Tamil News

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது..!

0

சர்வதேச கச்சா எண்ணை சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இதனால், கடந்த 7 நாட்களாக தினந்தோறும் படிப்படியாக உயர்ந்துகொண்டே வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி பெட்ரோல் விலை 16 காசுகள் உயர்ந்து, டெல்லியில் ரூ.78.68 ஆகவும், மும்பையில் ரூ.86.09 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.81.60 ஆகவும், சென்னையில் ரூ.81.75 ஆகவும் விற்பனையாகிறது.

இதேபோல், டீசல் விலையும் 21 காசுகள் உயர்வுடன் டெல்லியில் ரூ.70.42 ஆகவும், மும்பையில் ரூ.74.76 கொல்கத்தாவில் ரூ. 73.27 ஆகவும், சென்னையில் ரூ.74.41 ஆகவும் விற்பனையாகிறது.

இதனால், கார், லாரி, பஸ் மற்றும் இருசக்கர வாகன உரிமையாளர்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகி வருகின்றனர். நாளைய பொழுதாவது பெட்ரோல், டீசல் விலையேற்றம் இல்லாத நல்லபொழுதாக விடிய வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*