;
Athirady Tamil News

காதலனுடன் ஏற்பட்ட தகராறில் கால்வாயில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை..!!

0

தஞ்சை மானோஜிப் பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 21). இவரும் தஞ்சை வைரம் நகரை சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ் (20) என்பவரும் தஞ்சையில் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். ஜெயஸ்ரீ எம்.காம். படித்து வந்தார். விக்னேஷ் பிகாம். படித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இருவரும் தஞ்சை நெய்வாசல் நத்தம்படி பாலம் கல்லணை கால்வாய் பகுதியில் நின்று பேசிகொண்டு இருந்தனர். அப்போது ஜெயஸ்ரீயின் செல்போனை வாங்கி பார்த்த விக்னேஷ் அதில் பெயர் குறிப்பிடாமல் இருந்த ஒரு எண்ணை பார்த்து அது யாருடையது என்று கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாம் ஏற்பட்டது. இதில் மன முடைந்த ஜெயஸ்ரீ திடீரென விக்னேஷ் கன்னத்தில் அறைந்து விட்டு பாலத்தில் இருந்து கல்லணை கால்வாயில் குதித்து விட்டார். அதில் அதிக அளவில் தண்ணீர் சென்றதால் அவரை இழுத்து சென்றது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் ஜெயஸ்ரீயை மீட்பதற்காக அவரும் ஆற்றில் குதித்தார். அவரும் தண்ணீரில் நீந்த முடியாமல் தத்தளித்தார். இதனை அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த சிலர் பார்த்து கால்வாயில் குதித்து விக்னேசை மீட்டனர். ஆனால் ஜெயஸ்ரீயை மீட்க முடியவில்லை. அவர் கால்வாயில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதுபற்றி தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெயஸ்ரீ உடலை தேடினர். ஆனால் அவர் உடல் கிடைக்கவில்லை அவரது உடலை இன்று 2வது நாளாக தேடி வருகின்றனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஜெயஸ்ரீயிடம் செல்போன் நம்பர் தொடர்பாக பேசிய போது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஜெயஸ்ரீ தனது கன்னத்தில் அறைந்து விடடு கால்வாயில் குதித்து விட்டதாகவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 18 =

*