;
Athirady Tamil News

எங்களால் முடியும் என்ற தொணிப்பொருளில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சக்கரநாற்காலியில் பயணம்..!! (படங்கள்)

0

வவுனியா சூடுவெந்த புலவைசேர்ந்த முகம்மட் அலி என்ற இளைஞனே இன்றயதினம் காலை 8 மணியளவில் வவுனியா மணிக்கூட்டு சந்தியில் இருந்து கொழும்புநோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார்.

இது தொடர்பாக அவர்கூறும்போது 2015ம் ஆண்டு மின்சாரதூணில் இருந்துவிழுந்தமையால் இடுப்பிற்குகீழ் இயங்கமுடியாதநிலைமையில் சக்கரநாற்காலியிலேயே எனது பயணத்தை மேற்கொண்டு வருகின்றேன். என்னால் நடக்கமுடியாது இருப்பினும் எதையாவதுசாதிக்கவேண்டும் என்ற எண்ணம் என்மனதில் எழுந்தது, மற்றவர்செய்யும் வேலைகளை எங்களாலும் செய்யமுடியும் என்ற நோக்கிலே வவுனியாவில் இருந்த கொழும்புநோக்கி சக்கரநாற்காலியில் பயணிக்கஉள்ளேன் இந்தபயணம்வெற்றிகாமாக இருக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது என்று கூறினார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 20 =

*