;
Athirady Tamil News

நீ குள்ளமாக இருக்கிறாய் என அவமானப்படுத்தப்பட்ட 3 அடி உயர இளைஞர்: பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

0

பிரித்தானியாவில் 3 அடி உயரமே உள்ள குள்ள இளைஞருக்கு சமையல் பயிற்சி கல்லூரியில் இடம் மறுக்கப்பட்ட நிலையில் பிரபல சமையல் கலைஞர் அவருக்கு உதவ முன்வந்துள்ளார்.

லூயிஸ் மேக்பீஸ் (18) என்ற இளைஞர் இயற்கையிலேயே குள்ளமானவராக உள்ள நிலையில் சமையல் கலை மேல் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது.

இதையடுத்து ரெட்டிச் நகரில் உள்ள தனியார் கல்லூரியில் சமையல் பயிற்சியில் சேர முயன்றார் லூயிஸ்.

ஆனால், அவர் உயரம் குறைவாக உள்ளதை சுட்டி காட்டிய கல்லூரி நிர்வாகம், லூயிஸ் மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பார் என கூறி கல்லூரியில் இடம் கொடுக்க மறுத்துள்ளது

மேலும், இங்கு படித்தாலும் குள்ளமாக இருப்பதால் எங்கும் லூயிஸுக்கு வேலை கிடைக்காது எனவும் கல்லூரி நிர்வாகம் அவரை அவமானப்படுத்தியுள்ளது.

இதனால் மனம் உடைந்து போன லூயிஸ் சோகத்தில் ஆழ்ந்தார்.

இந்நிலையில் உலக புகழ்பெற்ற சமையல் கலைஞரான கோர்டன் ராம்சே இது குறித்து அறிந்த நிலையில் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், கல்லூரியின் அணுகுமுறை வெறுப்பூட்டும் வகையில் இருப்பதாக விமர்சித்துள்ள கோர்டன், லூயிஸுக்கு தான் தொழிற்பயிற்சி கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து லூயிஸ் கூறுகையில், நான் கோர்டனின் தீவிர ரசிகர், அவரின் சமையல் வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.அவருக்கு கீழ் பணிபுரிவது என்பது மிகபெரிய கெளரவம் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + six =

*