;
Athirady Tamil News

இலங்கை தமிழரசுக் கட்சியின் அடிப்படை கொள்கை சமஷ்டி..!!

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் அடிப்படை கொள்கை சமஷ்டி கொள்கை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த ஊடக சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சமஷ்டி என்ற பெயர்பப்லகை நமக்குத் தேவையில்லை என்றும், அதன் குணாதிசயங்களே வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமஷ்டியின் அடிப்படை குணாதிசயங்கள் அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சொற்களை தவிர்த்து உள்ளடக்கத்திலே ஒரு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வினை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டுக்கு சமஷ்டி முறை தேவையில்லை என்றும் தற்போது இருக்கின்ற மாகாண சபை முறையில் சிறு மாற்றம் செய்யப்படுமானால் அதனை ஏற்றுக் கொள்வதற்கு தமது மக்கள் தயார் என்றும் அண்மையில் காலியில் வைத்து எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, வடக்கிற்கும் கிழக்கிற்கும் அரச அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அது மக்களால் தெரிவு செய்யப்படுபவரின் கையிலே இருக்க வேண்டும். ஆளுநரின் கையிலல்ல என்று சுமந்திரன் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + nine =

*