;
Athirady Tamil News

வவுனியாவில் போக்குவரத்து பொலிஸ்சார் விரட்டிச் சென்ற மோட்டர் சைக்கிள் மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்து: மூவர் காயம்..!! (படங்கள்)

0

வவுனியாவில் போக்குவரத்து பொலிஸ்சார் விரட்டிச் சென்ற மோட்டர் சைக்கிள் மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்து: மூவர் காயம்

வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரால் விரட்டிச் செல்லப்பட்ட மோட்டர் சைக்கிள் மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் ஒரு இளைஞன் காயமடைந்துள்ளான்.

இரவு 9.30 மணியளவில் வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதி, இறம்பைக்குளம் சந்தியில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகர் பகுதியில் இருந்து பிளசர் ரக மோட்டர் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர். குறித்த மோட்டர் சைக்கிளை நகரப் பகுதியில் போக்குவரத்து கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசார் இருவர் குறித்த மோட்டர் சைக்கிளை மறித்துள்ளனர். இதன்போது குறித்த இளைஞர்கள் மோட்டர் சைக்கிளை நிறுத்தாது தப்பியோடிய போது போக்குவரத்து பொலிசார் அவர்களை தமது மோட்டர் சைக்கிளில் விரட்டிச் சென்றுள்ளனர். இதன்போது ஹொரவப்பொத்தானை வீதி வழியாக தமது மோட்டர் சைக்கிளை நிறுத்தாது செனற இளைஞர்களை பொலிசார் நெருங்கிய வேளை இறம்பைக்குளம் பாடசாலை அருகில் உள்ள சந்தியில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகினர். இதன்போது மோட்டர் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இளைஞன் சிறு காயங்களுக்குள்ளானார். குறித்த மூன்று இளைஞர்களும் 22 – 25 வயது மதிக்கத்தக்கவர்கள் என விபத்து இடம்பெற்ற பகுதியில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இவ்விபத்தின் போது குறித்த இளைஞர்களை பின்னால் விரட்டிச் சென்ற பொலிசார் ஒருவரும், விபத்துக்குள்ளான மோட்டர் சைக்கிளுடன் மோதி காயமடைந்ததாக விபத்து இடம்பெற்ற பகுதியில் நின்றவர்கள் தெரிவித்தனர். ஆனால் பொலிசார் இதனை மறுத்துள்ளனர்.

இதேவேளை, விபத்து இடம்பெற்ற குறித்த பகுதிக்கு வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிசார் பலரும் வருகை தந்து விபத்து இடம்பெற்ற பகுதியை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 9 =

*