;
Athirady Tamil News

அச்­சு­வேலி கொள்ளை சம்பவம்: ஒருவர் கைது..!!

0

அச்­சு­வேலி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­க­ளில் ஒன்­றரை மாதங்­க­ளுக்கு முன்­னர் 5 கடை­கள் உடைக்­கப்­பட்டு அங்­கி­ருந்த பொருள்­கள் திரு­டப்­பட்­டி­ருந்­தன.

இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தில் புதுக்­கு­டி­யி­ருப்­பைச் சேர்ந்­த­ இளை­­ஞன் நேற்று இரவு கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

பல்­பொ­ருள் விற்­பனை நிலை­யம், அழ­கு­சா­த­னப் பொருள்­கள் விற்­பனை நிலை­யம் உள்­ளிட்ட 5 கடை­கள் ஒன்­றரை மாதங்­க­ளுக்கு முன்­னர் இரவு நேரம் உடைக்­கப்­பட்டு பொருள்­கள் திரு­டப்­பட்­டி­ருந்­தது.

அந்­தக் கடை­க­ளில் இருந்த சி.சி.ரி.வி றிசீ­வ­ரும் திரு­டப்­பட்­டி­ருந்­தது. அலை­பே­சிக்­கான மீள் நிரப்பு அட்­டை­க­ளும் கள­வா­டப்­பட்­டி­ருந்­தது.

மீள்­நி­ரப்பு அட்­டை­க­ளின் இலக்­கங்­களை வைத்து பொலி­ஸார் தேடு­தல் நடத்­தி­னர். மீள்­நி­ரப்பு அட்­டை­களை கைது செய்­யப்­பட்ட 19 வய­தான சந்­தே­க­ந­பர் தனது அலை­பே­சிக்கு தொடர்ச்­சி­யா­கப் பயன்­ப­டுத்தி வந்­துள்­ளார்.

தொலைத் தொடர்பு நிறு­வ­னத்­தின் உத­வி­யு­டன் இத­னைக் கண்­ட­றிந்த அச்­சு­வே­லிப் பொலி­ஸார் சந்­தேக நபரை நேற்று இரவு கைது செய்­த­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 3 =

*