;
Athirady Tamil News

கலஹாவில் மீண்டும் வைத்தியசாலைக்காக ஆர்ப்பாட்டம்..!!

0

கலஹா வைத்தியசாலையை மீண்டும் திறக்குமாறு தெரிவித்து பிரதேசவாசிகள் சிலர் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இன்று (02) காலை முதல் இந்த ஆர்ப்பாட்டம் பல மணி நேரம் இடம்பெற்ற கலஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட பதற்றநிலைமை காரணமாக வைத்தியசாலையின் கட்டிடம் மற்றும் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலை நடவடிக்கைகளை மீண்டும் பழைய நிலைமைக்கு எடுத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × two =

*