;
Athirady Tamil News

சோமாலியாவில் அரசு அலுவலகம் மீது கார் குண்டு தாக்குதல் – 3 பேர் பலி..!!

0

சோமாலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹாவ்லே வாடாக் மாவட்டத்தில் உள்ள அம்மாவட்ட தலைமை நிர்வாக அலுவலகத்தின் மீது இன்று வேகமாக வந்த ஒரு கார் மோதி வெடித்து சிதறியது.

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 6 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கார் குண்டு வெடித்து சிதறிய வேகத்தில் அருகாமையில் இருந்த ஒரு பள்ளிக்கூட கட்டிடம் இடிந்து தரைமட்டம் ஆனது. ஒரு மசூதியின் மேற்கூரை மற்றும் சில வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*