;
Athirady Tamil News

ஒடிசாவில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய பெண் உள்பட 5 துப்புறவு தொழிலாளிகள் பலி..!!

0

ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டத்துக்கு உட்பட்ட டுர்கி கிராமத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கழிவுநீர் தொட்டிக்குள் ஒரு பெண் தொழிலாளி இன்று இறங்கினார். தொட்டியில் இருந்து வெளியான நச்சுவாயுவினால் மூச்சுத்திணறிய அந்த பெண்ணின் கூச்சலை கேட்டு அடுத்தடுத்து 5 தொழிலாளிகள் அவரை மீட்பதற்காக உள்ளே இறங்கினர்.

அவர்கள் 5 பேரும் மயக்கமடைந்து விழுந்தனர். இதைகண்ட அக்கம்பக்கத்தினர் தொட்டியின் மேல்பகுதியில் இருந்த சிமெண்ட் காரையை உடைத்து அவர்கள் 6 பேரையும் வெளியே மீட்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களில் ஒரு பெண் உள்பட 5 பேர் வழியிலேயே உயிரிழந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + fourteen =

*