;
Athirady Tamil News

எட்டு பெண்களை டேட்டிங் செய்து ஏமாற்றிய 45 வயது நபர்: கிடைக்க போகும் தண்டனை என்ன தெரியுமா?..!!

0

அமெரிக்காவில் டேட்டிங் செயலி மூலமாக 8 பெண்களை ஏமாற்றிய நபருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் பால் கோன்ஸாலெஸ்(45).

இவர், டேட்டிங் செயலி மூலமாக பல பெண்களை பேசி கவர்ந்துள்ளார்.

பின்னர், அவர்களுக்கு விருந்து அளிப்பதாகக் கூறி ஓட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நன்றாக சாப்பிட்டு விட்டு, தான் கூட்டிச் செல்லும் பெண்ணை தனியாக விட்டுவிட்டு தப்பித்து விடுவார்.

இவ்வாறாக இவர் 8 பெண்களை ஏமாற்றியுள்ளார். இவர் இதேபோல் 950 அமெரிக்க டொலர்கள் ஏமாற்றியுள்ளார். இந்நிலையில், இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஓட்டல் கமெராக்களில் பதிவான வீடியோ காட்சிகளின் மூலமாக பொலிசார் இவரை கண்டுபிடித்தனர்.

தற்போது பால் கோன்ஸாலெஸ் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அவருக்கு 13 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + five =

*