;
Athirady Tamil News

கியூபெக் நகர சாலைகள் கனடாவில் மிக மோசமானவை: புள்ளி விவர தகவல்..!!

0

கனடாவின் கியூபெக் நகரில் உள்ள சாலைகள், நாட்டிலேயே மிகவும் மோசமானதாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

Statistics Canada சமீபத்தில் புதிய கருத்துக் கணிப்பு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கியூபெக் நகரின் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக் கணிப்பில் பெரும்பாலான மக்கள், சாலைகள் மோசமாக அல்லது மிக மோசமாக உள்ளன என்றே தெரிவித்துள்ளனர்.

ஆனால், Nova Scotia நகர இதற்கு விதிவிலக்காக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு Infrastruture Canada நாடு முழுவதும் உள்ள 1,500 நகராட்சிகள் மற்றும் மாகாண அமைப்புகளில் கருத்துக் கணிப்பு மேற்கொண்டது.

அதில், கியூபெக் நகரில் பாதி சாலைகள் மிக மோசமாக உள்ளதாகவும், அவற்றை சரிசெய்ய 15 பில்லியன் டொலர்கள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − seven =

*