;
Athirady Tamil News

வவுனியாவில் வீட்டுக்காணியிலிருந்து குண்டுகள் மீட்பு..!! (படங்கள்)

0

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழங்குளம் பகுதியிலுள்ள வீட்டுக்காணியிலிருந்து வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றுப்பிற்பகல் ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழங்குளம் பகுதியிலுள்ள தனது வீட்டுக்காணி ஒன்றினை உரிமையாளரினால் துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது காணியில் மிதிவெடிகள், மோட்டார் குண்டு, ஆர்.பி.ஜி ரக குண்டுகள் போன்ற வெடி பொருட்கள் இருந்துள்ளதை கண்டுள்ளார். இதையடுத்து ஓமந்தை பொலிசாருக்கு வீட்டுக்காணியின் உரிமையாளரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அப்பகுதியை பாதுகாப்பு வலயமாக அமைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற அனுமதியுடன் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப்பகுதியில் இன்று மேலும் தோண்டும் பணிகள் நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*