;
Athirady Tamil News

போலி நாணத்தாள்களுடன் ஒருவர் கைது..!!

0

புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் இன்று (03) காலை 8 மணியளவில் 5000 ரூபா போலி நாணயத்தாள் 13 உடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை, இறக்காமம் 03 பகுதியை சேர்ந்த 39 வயதுடைய அப்துல் லதீப் நிசார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 5000 ரூபா நாணயம் ஒன்றை பேருந்து நடத்துனர் ஒருவருக்கு வழங்கி மாற்றித் தருமாறு வேண்டியுள்ளார்.

இதன்போது குறித்த நாணயம் தொடர்பில் பேருந்து நடத்துனருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவர் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணை செய்த போது குறித்த நபரிடம் இருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 13 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்றவியல் தடுப்பு பிரிவினர் மேற்கொள்ள உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 4 =

*