;
Athirady Tamil News

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை..!!

0

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புகுழுக்கூட்டம் இன்று காலை 10மணியளவில் மாவட்ட செலயகத்தில் இடம்பெற்றுவருகின்றது. இதில் கலந்துகொள்வதற்கு வவுனியாவிலுள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

மாவட்டத்திலுள்ள முக்கிய வேலைத்திட்டங்கள், அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக அமைச்சர்கள் அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்தித்குழுக்கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டவில்லை. முன்னர் கடமையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர்கள் தமது வேலைத்திட்டங்கள் மாவட்ட செயலகத்தின் அடைவுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல்கள் வழங்கிவந்துள்ளனர்.

எனினும் புதிதாக தெரிவாகியுள்ள மாவட்ட அரசாங்க அதிபர் இவ்விடயத்தில் கரிசனையற்ற நிலையில் காணப்படுகின்றாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு வடமாகாண முதலமைச்சர், மத்திய அமைச்சர் கலந்துகொள்ளும் மிக முக்கிய கூட்டமான அபிவிருத்திக்குழுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலகத்திலுள்ள அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு அறிவித்தல் வழங்கப்படவில்லை.

இதனால் அபிவிருத்திகள் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பல மக்களுக்குச் கொண்டு செல்லும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தாமல் அபிவிருத்திக்குழுக்கூட்டம் இடம்பெற்று வருகின்றமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 8 =

*