;
Athirady Tamil News

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றம்..!! (படங்கள்)

0

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (03) வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா தலைமையில் இடம்பெற்றது.

இணைத் தலைவர்களான அமைச்சர் ரிசாட் பதியுர்தீன், வட மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கே. கே. மஸ்தான், குழுக்களின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்ட இக் கூட்டத்தில் பல்வெறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் அவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கான காலங்களும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதன்போது வவுனியா வடக்கில் மீள் குடியேறியுள்ள இந்தியாவில் இருந்து வருகைதந்தவர்களுக்கும் வன இலாகாவினருக்கும் இடையிலான பிரச்சனைகள், வரட்சியினால் நன்னீர் மீன் வளர்ப்பாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள், அருவித்தோட்டம் குளத்தினை நம்பி விவசாயம் செய்துள்ள விவசாயிகள் இராணுவத்தினரின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள விடயங்கள், பம்பைமடுவில் வவுனியா நகரசபை மற்றும் பிரதேசசபை என்பன குப்பைகளை கொணட:டுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள், வவுனியா கூட்டுறவுக்கல்லூரி புனர்வாழ்வு முகாமாக செயற்படுவதும் அதனை மீள்ப்பெறுவது தொடர்பாகவும் இக் கூட்டத்தில் முக்கிய விடயங்களாக கலந்துரையாடப்பட்டதுடன், வவுனியா நகரத்தில் திணைக்களங்களுக்கு காணிகள் ஒதுக்கும் விடயத்தில் அரசாங்க அதிபருடன் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கடும் வாக்குவாதத்தில் ஈடபட்டிருந்தார். மேலும் பல விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

????????????????????????????????????
????????????????????????????????????

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*