;
Athirady Tamil News

வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு..!! (படங்கள்)

0

வவுனியாவில் இன்று (03.09) அதிகாலை சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட 5 பேரைக்கைது செய்துள்ளதாக வவுனியா வன இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா வன இலாகாவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று (03.09) அதிகாலை 4 மணியளவில் வேலங்குளம் பகுதியில் இருந்து மகாரம்பைக்குளம் பகுதிக்கு 5பேர் சட்டவிரோத மரக்கடத்திலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சட்டவிரோதமாக கடத்தவிருந்த 18முதிரைமர குற்றிகளை ஏற்றிய நிலையில் பட்டா வாகனம் , இரண்டு மோட்டார்‌ சைக்கிள்கள் , 5சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாகவும் குறித்த மரங்களை மகாரம்பைக்குளம் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படவிருந்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது ஐவரையும் எதிர்வரும் 06 திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − eleven =

*