;
Athirady Tamil News

அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 33வது நினைவுதினம் அனுஸ்டிப்பு..! (படங்கள் இணைப்பு) பகுதி -03

0

அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 33வது நினைவுதினம் அனுஸ்டிப்பு..! (படங்கள் இணைப்பு) பகுதி -03

இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2018) மாலை 5மணியளவில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

கல்லூரியின் பீடாதிபதி திரு. அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பீடாதிபதி திரு. அமிர்தலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வைத்தியக்கலாநிதி தியாகராஜா, விரிவுரையாளர் பத்மரஞ்சன் ஆகியோர் உரையாற்றியதோடு, அமரர் வி.தர்மலிங்கம் நினைவுக்குழுவின் தலைவர் நவாலியூர் கௌரிகாந்தன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இந் நிகழ்வில் கோப்பாய் பிரதேசசபைத் தலைவர் நிரோசன், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

தகவல் & படங்கள்… “புளொட்” ஊடகப்பிரிவு சார்பாக தோழர்.ஆர்.ஆர்..

அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 33வது நினைவுதினம் அனுஸ்டிப்பு..! (படங்கள் இணைப்பு) பகுதி -02

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 1 =

*