ஜி.எஸ்.டி. விளம்பரத்துக்கு ரூ.132.38 கோடி செலவு..!!

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நாடு முழு வதும் கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி அமல்படுத்தப்பட்டது.
ஜி.எஸ்.டி. குறித்து மக்கள் அறிந்து கொள்ள மத்திய அரசு விளம்பரம் செய்தது. இந்த விளம்பரத்துக்காக ரூ.132.38 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. பத்திரிகைகளில் செய்த விளம்பரம் மூலம் ரூ.126.93 கோடியும், வெளிப்புற ஊடகங்கள் மூலம் 5.44 கோடியும் செலவழிக்கப்பட்டது.