;
Athirady Tamil News

பாஜக ஒழிக என ஏர்போர்ட்டில் கோஷம் – பெண்ணுடன் தமிழிசை சவுந்தர ராஜன் வாக்குவாதம்..!!

0

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் இன்று பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும் சோபியா என்ற பெண் பாஜக ஒழிக என கோஷமிட்டுள்ளார். இதனை அடுத்து, தமிழிசை சவுந்தர ராஜனுக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், அங்கிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார்.

விசாரணையில், கோஷமிட்டதாக சொல்லப்படும் அந்த இளம் பெண், தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா (23) என்பதும், தற்போது அவர் கனடாவில் படித்து வருவதும் தெரியவந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*