;
Athirady Tamil News

வளர்ப்பு பிராணிகளுக்கான இறைச்சியை சமைத்து பரிமாறிய உணவகம்: பெருந்தொகை அபராதம் விதிப்பு..!!

0

அவுஸ்திரேலியாவில் செயல்பட்டுவரும் இந்திய உணவகம் ஒன்றில் வளர்ப்பு பிராணிகளுக்கான இறைச்சியை சமைத்து பரிமாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பாக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் 14,000 டொலர் அபராதம் விதித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் அமைந்துள்ள Cafe Marica என்ற இந்திய உணவகத்திலேயே வளர்ப்பு பிராணிகளுக்கான மாமிச உணவை பொதுமக்களுக்கு சமைத்து பரிமாறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவகத்தில் சோதனையிட்ட போது சுமார் 15 கிலோ அளவுக்கு வளர்ப்பு பிராணிகளுக்கான உணவு பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டது.

மட்டுமின்றி அந்த உணவகத்தின் உரிமையாளர் கோபிகரன் கிருஷ்ணசாமி, அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்றபோது அதே இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

உணவுப் பொருட்களை தங்கள் உணவகத்துக்கு வழங்கும் நபரால் இந்த தவறு நடந்துள்ளதாக கிருஷ்ணசாமி தமது பேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − fourteen =

*