;
Athirady Tamil News

காப்பாற்ற ஏற்கனவே பிளான் போட்டுட்டு ஐஸ்வர்யாவை நாமினேஷனுக்கு அனுப்பிய பிக் பாஸ்?..!! (வீடியோ)

0

ஐஸ்வர்யாவை காப்பாற்ற பிளான் போட்டுவிட்டு நாமினேட் செய்துள்ளாரோ பிக் பாஸ்?

பிக் பாஸ் 2 வீட்டில் நாமினேஷன் வேலை துவங்கிவிட்டது. ஐஸ்வர்யா, சென்றாயன் ஆகியோரை ஜனனி நாமினேட் செய்துள்ளார். நாமினேட் செய்யும் முன்பு அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று பேசினார்.

அவராக அப்படி பேசவில்லை. பிக் பாஸ் சொன்னதை தான் செய்தார்.

ஐஸ்வர்யா
நீங்கள் இதுவரை நாமினேட் செய்யப்படவில்லை. அதனால் உங்களை நாமினேட் செய்கிறேன் என்று ஜனனி ஐஸ்வர்யாவிடம் தெரிவித்தார். உடனே ஐஸ்வர்யாவோ நான் நாமினேட் ஆகவில்லை ஆனால் டாஸ்குகளில் நன்றாக செயல்படுகிறேன் என்று சப்பைக் கட்டு கட்டினார். நீங்கள் உங்களின் உணர்ச்சிகளை காட்டுகிறீர்கள் நாங்கள் காட்டவில்லை என்று ஐஸ்வர்யாவின் தலையில் குட்டு வைத்தது போன்று பேசினார் ஜனனி. ஐஸ்வர்யாவுக்கு அதற்கு மேல் மழுப்ப முடியவில்லை.

நாமினேஷன்
கோபப்படுவதால் சென்றாயனை நாமினேட் செய்துள்ளார் ஜனனி. கோபப்படாமல் இருக்க நான் என்ன ஜடமா. ஒருத்தர் மாதிரி நான் அனைவர் மீதும் கோபத்தை காட்டவில்லை என்று ஐஸ்வர்யாவை பக்கத்தில் வைத்துக் கொண்டே பேசினார் சென்றாயன். சூப்பர் சென்டு, கலக்கிட்டீங்க போங்க. சென்டு சொன்னதை கேட்ட ஐஸ்வர்யாவோ அவர் வேறு யாரையோ பற்றி பேசுவது போன்று நடந்து கொண்டார்.

காப்பாற்றுதல்
வீட்டின் தலைவியான எனக்கு யாரையாவது காப்பாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்று யாஷிகா ஐஸ்வர்யாவிடம் தம்மடிக்கும் அறையில் வைத்து தெரிவித்தார். நான் உன்னை உள்ளே அழைத்துச் செல்கிறேன்., நீ விளக்கம் சொல்லு நான் உன்னை மீண்டும் காப்பாற்றிவிடுகிறேன் என்று ஐஸ்வர்யாவிடம் கூறினார் யாஷிகா. யாஷிகாவை வைத்து ஐஸ்வர்யாவை பிக் பாஸ் காப்பாற்றுவது தாடி பாலாஜிக்கும் புரிந்துவிட்டது.

ஜனனியை போன்றே தாடி பாலாஜியும் ஐஸ்வர்யாவை நாமினேட் செய்தார். ஐஸ்வர்யாவை பேட்டி பேட்டி என்று கூறிவிட்டு ஐஸ்வர்யாவை நாமினேட் செய்துள்ளார் மும்தாஜ். அன்புடன் கூறியதை தவறாக புரிந்து கொண்டு பிரச்சனை செய்ததற்காக மும்தாஜ் ஐஸ்வர்யாவை நாமினேட் செய்துள்ளார். வரிசையாக நான் நாமினேட் செய்யப்படுவதை பார்த்த ஐஸ்வர்யா முகத்தில் ஈயாடவில்லை. விளையாட்டு மும்தாஜை அடுத்து ரித்விகாவும் ஐஸ்வர்யாவை நாமினேட் செய்தார். தமிழ் மக்கள் முட்டாள் இல்லை என்று விஜயலட்சுமி சொன்னது ஒரு பெரிய குத்தம் என்று ஐஸ்வர்யா அழுது சீன் போடுகிறார்.

தமிழ் மக்களுக்கு அவரை சுத்தமாக பிடிக்கவில்லை என்பது அவருக்கு எப்பொழுது தான் தெரியுமோ? கொஞ்சம் சொல்லக் கூடாதா பிக் பாஸ். திட்டம் ஐஸ்வர்யா, ஜனனி, மும்தாஜ், சென்றாயன் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். வீட்டின் தலைவியான யாஷிகா தனது தோழி ஐஸ்வர்யாவை காப்பாற்றத் துடிக்கிறார். கடைசி நிமிடத்தில் யாரையாவது காப்பாற்றும் அதிகாரத்தை பிக் பாஸ் யாஷிகாவுக்கு அளிப்பார். முன்பு செய்தது போன்றே இந்த முறையும் அவர் ஐஸ்வர்யாவை காப்பாற்றிவிடுவார். ஐஸ்வர்யாவை காபாற்றத் தேவையான நடவடிக்கை எடுத்துவிட்டு அவரை நாமினேட் செய்தது போன்று உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*