;
Athirady Tamil News

யாழ் விபத்தில் ஒருவர் பலி – ஒருவர் காயம்..!!

0

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று (04) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வேன் ஒன்று உழவு இயந்திரம் ஒன்றும் மோதிக்கொண்டதில் உழவு இயந்திரத்தில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் யாழ்ப்பாணம் சரசாலை பகுதியை சேர்ந்த க.விக்னேஸ்வரன் எனும் 55 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன் 42 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த நபரை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் வேனின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − one =

*