;
Athirady Tamil News

எழுகையின் கௌரியோக அறிவாயலம் இலவசக் கல்வி நிலையம் ஆரம்பம்..!!

0

எழுகை சுவிஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினூடாக பரந்தன், சிவபுரம், உமையாள்புரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்காக 7ஆம் ஒழுங்கை, முல்லைத்தீவு வீதி, பரந்தனில் முற்றுமுழுதமாக இலவசமாக கல்வி கற்கும் வளமத்திய நிலையம் அங்குராட்பனம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் எழுகை தன்னார்வத் தொண்டு நறுவனத்தின் செயற்பாட்டாளர் சின்னப்பு யோகராசா அவர்களின் சிந்தனையில் சுவிஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வசிக்கும் சுப்பிரமணியம் யோகநாதன் அவர்களின் நிதி அனுசரனையில் கல்வி கற்பதற்கு நிதி வசதியில்லாத மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்குடன் கடந்த வாரம் ‘எழுகையின் கௌரியோன அறிவாலயம்’ மங்களகரமாக அங்குராட்பனம் செய்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் எழுகை இலங்கையின் தலைவர், செ. கேசவன், செயலாளர், கோ.ரூபகாந், பொருளாளர், அ.யோகமலர், மற்றும் சிறுவர்மேம்பாட்டு உத்தியோகத்தர், எழுகையின் நிர்வாக உறுப்பினர்களான யாழினி, அ.நந்தின், தர்சன், லதா மற்றும் ஆசிரியர்கள், சுப்பிரமணியம் யோகநாதன், அவரின் தாயார், மற்றும், ஆசிரியர்கள், பொது அமைப்புக்களின் தலைவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், யுஐயு நிறுவனத்தின் அலுவலர், இசைக் கலைஞர் கந்தப்பு சமூக ஆர்வலர்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கல்வி, கலை, உளவளஆற்றுப்படுத்தல், விளையாட்டு, இணைப்பாடவிதான செயற்பாடுகள் என அத்தனை விடையங்களும் சிறந்த ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு புகட்டப்படும், இங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், சத்துணவு என அணைத்தும் வழங்கப்படும்.
ஏதிர்வரும் 06.09.2018 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் அனைத்தும் ஆரம்பிக்கப்படும் எனவே பரந்தன், உமையாள்புரம், சிவபுரம் ஆகிய கிராமங்களில் கல்வி பயிலும் தரம் 03 தொடக்கம் 09 வரையான மாணவர்களை கற்றல் நிலையத்திற்கு வருகைதருமாறு அழைக்கின்றனர் எழுகை நிர்வாகத்தினர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*