;
Athirady Tamil News

அவர் மோசமானவர், திருமணத்தை நிறுத்துங்க.. தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி ..!!

0

அமெரிக்காவில் திருமணம் நடக்கவிருந்த நேரத்தில் மணமகனுடன் தனக்கு ஏற்கனவே தவறான தொடர்பு உள்ளது என ஒரு பெண் கூறிய நிலையிலும், தடையில்லாமல் திருமணம் நடைபெற்றுள்ளது.

கோரி பெர்ல்சன் என்ற இளைஞரும், பிரியனா இலாந்து என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடந்தது.

இதையடுத்து மணமக்கள் தங்களது இன்ஸ்டாகிராமில் #theperlsons என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினார்கள்.

அந்த டேக்கில் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவேற்ற நினைத்தார்கள்

இந்நிலையில் மயூரா ஏஞ்சல் என்ற பெண் தனக்கு கோரியுடன் ஏற்கனவே தொடர்பு இருப்பதாக கூறி அவருடன் தான் இருந்த புகைப்படங்களை அந்த டேக்கில் பதிவிட்டார்.

புகைப்படங்களை மணப்பெண்ணும், உறவினர்களும் பார்த்து திருமணத்தை நிறுத்த வேண்டும் என்றே ஏஞ்சல் அவ்வாறு செய்தார்.

மேலும், கோரியுடன் தான் உறவு கொண்டதாகவும் கூறினார்.

ஆனால் என்ன ஆனது என தெரியவில்லை, ஏஞ்சல் வெளியிட்ட அனைத்து புகைப்படங்கள் திடீரென அழிக்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 9 =

*