;
Athirady Tamil News

பிரித்தானிய இளவரசி டயானாவின் விலையுயர்ந்த நகைகள் தற்போது யாரிடம் உள்ளது தெரியுமா?.!!

0

பிரித்தானிய இளவரசி டயானா மறைந்து நேற்றுடன் 21 ஆண்டுகள் ஆகிவிட்டது.36 வயதில் இறந்த டயானா நேர்த்தியான உடைகள் மற்றும் அழகான நகைகள் அணிவதில் ஆர்வமாக இருந்தார்.

இறப்புக்கு பின்னர் தன்னுடைய ஆபரணங்களை தனது மகன்களான வில்லியம் மற்றும் ஹரியிடம் விட்டு சென்றதாக தெரிகிறது.

பிற்காலத்தில் இருவருக்கும் திருமணம் ஆனதும் அவர்களின் மனைவிக்கு நகைகளை கொடுக்கவே டயானா இப்படி செய்தார் என கூறப்பட்டது

முக்கியமாக வைரத்தாலே ஆன விலையுயர்ந்த டயானாவின் நிச்சயதார்த்த மோதிரம் அவரின் இரண்டு மகன்களில் யாருக்கு முதலில் திருமண நிச்சயம் நடக்கிறதோ அவர்களுக்கு அணிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி வில்லியமுக்கும் கேட் மிடில்டனுடனுக்கும் முதலில் திருமணம் நடந்த நிலையில் கேட்-க்கு தனது தாயின் மோதிரத்தை வில்லியம் அணிவித்தார்.

அதே போல நெக்லஸ், காது தோடுகள், ப்ரேஸ்லெட், கை கடிகாரங்கள் போன்றவைகளையும் டயானா வைத்திருந்தார்.இதில் ப்ரேஸ்லெட் கழுத்து பட்டையாக மாற்றி செய்யப்பட்டது

இந்த நகைகள் எல்லாம் தற்போது யாரிடம் உள்ளது என தெரியாத நிலையில் காது தோடுகள் மற்றும் கிரீடத்தை கேட் மிடில்டன் பயன்படுத்தி வருகிறார்.

இதில் பல நகைகளை டயானாவுக்கு அவரின் திருமணத்தின் போது மகாராணி எலிசபெத்தின் தாய் பரிசளித்தார்.

டயானாவின் வைர கற்களின் சில பகுதிகள் ஹரி – மேகன் மெர்க்கல் திருமண நிச்சயதார்த்த மோதிரத்துக்கு பயன்படுத்தபட்டதாக கூறப்படுகிறது.

டயானா விவாகரத்துக்கு பின்னரும் அணிந்திருந்த மோதிரத்தை தற்போது மெர்க்கல் அணிந்துள்ளதாக தெரிகிறது.

இதோடு மேலும் முக்கிய நகைகளை டயானா வைத்திருந்தார். இவையெல்லாம் அவருக்கு சொந்தமானது கிடையாது, ராஜ குடும்ப சேகரிப்பு கணக்கில் இவை வரும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × one =

*