5 வயது சிறுவனுக்கு வீட்டு எஜமான் கொடுத்த கொடூர தண்டனை! தாயோ அவர் நல்லவர் என கூறியதால் அதிர்ச்சி..!!

ரஷ்யாவில் எஜமானின் பேச்சை கேட்காததால், 5 வயது சிறுவன் ஒருவன் தனக்கு தானே மின்சாரம் வைத்து தண்டித்துக் கொண்டது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் Yekaterinburg நகரத்தில் உள்ள பகுதியில் வீட்டில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் தன்னுடைய 5 வயது மகனை அங்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அந்த வீட்டின் எஜமானார், அந்த சிறுவனை 10 முறை புஷ் அப் எடுக்கும் படி கூறியதாக கூறப்படுகிறது.
ஆனால் சிறுவன் அதை செய்யத் தவறியதால், ரிமோட் மூலம் மின்சாரத்தை வைத்து தண்டிக்கும் வினோத தண்டனை அந்த முதலாளி அளித்துள்ளார்
அதாவது சிறுவனிடம் ரிமோட்டை கொடுத்து நீயே அழுத்தி கொள் என்கிறார். சிறுவன் ஒவ்வொரு முறை அழுத்தும் போது, மின்சாரத்தின் காரணமாக துடிக்கிறான்.
ஆனால் அந்த முதலாளியோ தொடர்ந்து அழுத்தும் படி கூறியுள்ளார். இப்படி அந்த சிறுவன் 15 முறை அழுத்தியுள்ளான்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபருக்கு 40 வயது இருக்கும் எனவும், ஆனால் அந்த பெண்ணோ தன் மகனை இப்படி டார்ச்சர் செய்த நபர் மீது புகார் கொடுக்காமல், முதலாளி நல்ல மனிதர் என்று கூறியுள்ளதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது