;
Athirady Tamil News

யாழ்.மாவட்ட தாச்சிச்சங்க 2018ஆம் ஆண்டுக்கான தாச்சிச்சுற்ற்ப்போட்டி..!! (படங்கள்)

0

யாழ்.மாவட்ட தாச்சிச்சங்க 2018ஆம் ஆண்டுக்கான தாச்சிச்சுற்ற்ப்போட்டியின் இறுதிப்போட்டி – வடமாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

யாழ்.மாவட்ட தாச்சிச்சங்கத்தினால் நடாத்தப்படும் 22ஆம் ஆண்டு மாவட்டம் தழுவிய தாச்சிச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று 03.092018 திங்கட்கிழமை மாலை 03 மணியளவில் யாழ்.மாவட்ட தாச்சிச்சங்கத்தலைவர் வை.ஆனந்தஜெஸ்கரன் தலைமையில் பண்டத்தரிப்பு சாந்தை விநாயகர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்வின் விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராசா, பா.கஜதீபன் மற்றும் யூ.ஆர் பிரண்ட் அமைப்பின் தலைவர் க.செவ்வேள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்விறுதிப்போட்டியில் மயிலிட்டி கண்ணகி விளையாட்டுக்கழகமும், சாந்தை விநாயகர் விளையாட்டுக்கழகமும் மோதியதில், பண்டத்தரிப்பு சாந்தை விநாயகர் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று கிண்ணத்தைச்சுவீகரித்துக்கொண்டது. ஆண், பெண் என இருபிரிவினருக்கான போட்டிகளும் தனித்தனியாக இடம்பெற்றன.

நிகழ்வின் விருந்தினர்களால் வெற்றி பெற்றோருக்கான கிண்ணங்களும், பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன. விருந்தினர்கள், யாழ்.மாவட்ட தாச்சிச்சங்க நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள், ஊரவ்ர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 20 =

*