;
Athirady Tamil News

தினமும் புடலங்காய் சாறு குடியுங்கள்..!!

0

புடலங்காயில் மிக அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் இவற்றில் எல்லாவற்றையும் விட மிக அதிகமாக நீர்ச்சத்து இருக்கிறது.

புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகியவை நிறைந்திருக்கின்றன.

இத்தனை ஊட்டச்சத்துக்கள் கொண்ட புடலங்காயில் இருந்து கிடைக்கும் சாற்றினை பருகுவதினால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.

ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க
புடலங்காயில் மிகக் குறைவான கலோரிகளைக் கொண்டது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடல் பருமன் ஏற்படும். அந்த பருமனைக் குறைக்கும் தன்மை புடலங்காய்க்கு உண்டு

மலேரியா குணப்படுத்த
சின்ன சின்னதாக புடலங்காயை நறுக்கி பின்பு சாறு பிழிந்து அதனை டிக்காஷன் போல செய்து, காய்ச்சல் சமயங்களில் குடித்து வர காய்ச்சல், மலேரியா காய்ச்சல் கூட தீர்ந்து போகும்.

மஞ்சள் காமாலை போக்க
ஒரு நாளைக்கு மூன்று வேளையும் இந்த புடலங்காய் சாறினை குடித்து வந்தால், மஞ்சள் காமாலை மிக விரைவாக குணமடைந்து விடும்.

இதய ஆரோக்கியம் மேம்பட
புடலங்காய் சாறினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மன அழுத்தம் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படும். ஒரு நாளைக்கு இரண்டு கப் அளவுக்கு புடலங்காய் சாறு குடித்து வந்தால், இதயம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்னையும் உண்டாகாது.

மலச்சிக்கல் குணப்படுத்த
புடலங்காயில் அதிக அளவில் நார்ச்சத்து அதிகம். அதனால் காலையில் வெறும் வயிற்றில் தினமும் காலையில் இரண்டு ஸ்பூன் புடலங்காய் சாறு குடித்து வந்தால் போதும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அனைத்தும் சரியாகும்.

பொடுகுத் தொல்லை சரிசெய்ய
புடலங்காய் சாறினைக் எடுத்து தலைமுடியின் வேர்க்கால்களில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து விட வேண்டும். இந்த சாறினைத் தேய்த்து அரை மணி நேரம் வரை ஊற விட்டு பின்னர் மென்மையான ஷாம்புவை கொண்டு தலையை அலசினால் போதும், பொடுகுப் பிரச்னைகள் அத்தனையும் சரியாகிவிடும்.

உடலில் நச்சுக்களை வெளியேற்றுதல்
உடலுக்குள் இருக்கும் அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்றுவதற்கு நீர்ச்சத்து மிக மிக அவசியம். வெறுமனே எப்போதும் தண்ணீர் மட்டுமே குடிக்க முடியாது என்பதால், புடலங்காயை சாறெடுத்து அதைக் குடித்து வரலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 18 =

*