;
Athirady Tamil News

குட்கா விவகாரம்: அமைச்சர், முன்னாள் கமிஷனர் வீடு உட்பட 40 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு..!!

0

குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரின் வீடு உட்பட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்ய லஞ்சம் பெற்ற அதிகாரிகள் யார் என்பதைக் கண்டுபிடிக்க சிபிஐ அதிகாரிகள் குட்கா விவகாரத்தில் சிக்கிய மாதவராவிடம் அண்மையில் விசாரணை நடத்தினர். மாதவராவிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, அவரது குட்கா குடோனுக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர். சுமார் 10 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

யார் யார் லஞ்சம் பெற்றனர்? அப்போது குட்கா விற்பனைக்காக வழங்கப்பட்ட லஞ்சம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மேலும், எவ்வளவு காலம் லஞ்சம் கொடுக்கப்பட்டது, எந்த அதிகாரிகள் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள், உடந்தையாக இருந்தது யார்? யார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். 40 இடங்களில் சோதனை அதற்கு அவர் அளித்துள்ள பதில்களை வீடியோவிலும், எழுத்து மூலமாகவும் பதிவு செய்தனர்.இந்நிலையில் மாதவராவ் தகவலின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் வீட்டில் ரெய்டு சென்னையில் உள்ள முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த பல்பொருள் அங்காடி உரிமையாளர் உள்ளிட்டோரின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டைரியில் உள்ள பெயர்கள் குட்கா விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். குட்கா அதிபர் மாதவராவ் டைரியில் உள்ள பெயர்களின் அடிப்படையில் பினாமிகள் பலரின் அலுவலகங்களில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 5 =

*