;
Athirady Tamil News

அந்த பக்கம் அவர்.. இந்த பக்கம் இவர்.. பேரணிக்காக அழகிரி வாங்கி கொடுத்த ஸ்பெஷல் கருப்பு டீ-சர்ட்..!! (வீடியோ)

0

மு.க அழகிரி நடத்தும் பேரணிக்கு வந்து இருக்கும் அவரது தொண்டர்கள் வித்தியாசமான கருப்பு நிற டீ-சர்ட் அணிந்து இருக்கிறார்கள். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதி நோக்கி மு.க அழகிரி நடத்தும் பேரணிதான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக். இதனால் திமுகவில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை நோக்கி மு.க அழகிரி தலைமையில் இன்று அமைதி பேரணி நடத்தப்பட உள்ளது. இன்று காலை 11 மணி அளவில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பெரிய கொண்டாட்டம் இந்த அமைதி பேரணி உண்மையில் அத்தனை அமைதியாக நடக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். ஆம்சென்னையில் உள்ள பறை இசை கலைஞர், பேண்ட் வாத்தியக்காரர்கள் இந்த பேரணியில் வாசிக்க வரவழைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மதுரையில் இருந்தும் ஆட்கள் இறக்கப்பட்டுள்ளனர். சிறப்பு டீ சர்ட் அதேபோல் சென்னையில் உள்ள பெரும்பாலான அழகிரி விசுவாசிகள் எல்லோரும் ஒரே நிற டீ சர்ட் மட்டுமே அணிந்து இருக்கிறார்கள். எல்லோருக்கும் கருப்பு நிற டீ சர்ட் வாங்கி தரப்பட்டுள்ளது. அதில் முன்பக்கம் பெரிதாக அழகிரி புகைப்படம், சிறிதாக கருணாநிதி புகைப்படம் உள்ளது.

பின்பக்கம் தயாநிதி அழகிரி புகைப்படம் உள்ளது. ஸ்டாலினை காணோம் அதேபோல் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது எங்குமே இவர்கள் மூவர் புகைப்படத்தை தவிர வேறு புகைப்படங்கள் பயன்படுத்தப்படவில்லை. அழகிரி, கருணாநிதி, தயாநிதி அழகிரி ஆகியோர் மட்டுமே இருக்கிறார்கள். அறிஞர் அண்ணா, பெரியார் புகைப்படம் கூட இல்லை. பஸ் ஒரு நாளைக்கு 10 டிரெயின் வருது, நான் ஆள் இறக்கி காட்டட்டுமா என்று சிங்கம் படத்தில் சூர்யா சொல்வது போல அழகிரி ஆள் இறக்கி வைத்துள்ளார். ஆம் ரயிலுக்கு பதிலாக, பேருந்துகளில் நேரடியாக ஆட்களை இறக்கி உள்ளார். தென்மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் ஆட்கள் குவிந்து இருக்கிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + eighteen =

*