;
Athirady Tamil News

வவுனியாவில் புதிய கட்டிடத்திலிருந்து வர்த்தக சங்கத்தின் சேவைகள்..!! (படங்கள்)

0

வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா இன்று (05.09.2018) வர்த்தக சங்கத்தின் தலைவர் சுஜன் சண்முகராஜா தலைமையில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட வவுனியா , மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரம அவர்கள் கலந்து கொண்டு வர்த்தக சங்கத்தின் பெயர்ப்பலகையினை திரைநீக்கம் செய்து வைத்ததுடன் அலுவலத்தினை பிரதி பொலிஸ் மா அதிபருடன் இணைந்து வவுனியா நகரசபையின் தலைவர் இராசலிங்கம் கௌதமன் நாடா வெட்டி திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயுரன், வவுனியா நகர பள்ளிவாசல் தலைவர், வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், வவுனியா சிகையலங்கார சங்கத்தின் பிரதிநிதிகள், வவுனியா அச்சக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், வவுனியா வரிவிறுப்பாளர் சங்கத்தின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் , உள்ளுர் விலைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதிநிதி நந்தன், வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள், வர்த்தகர்கள் , சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*