;
Athirady Tamil News

அரசாங்கத்தை கவிழ்க்க மஹிந்த அழைப்பு..!!

0

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அனைவரும் ஒன்று சேருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

´மக்கள் பலம் கொழும்புக்கு´ ஆர்ப்பாட்ட பேரணியில் சற்று முன்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இப்போது நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பல்வேறு கஷ்டங்களுக்கு உள்ளாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் நாட்டில் ஜனாநாயகம் முற்றாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு கூட அரசாங்கத்தால் முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் மக்களுடன் ஒன்றிணைந்து இன்று வீதியில் இறங்கி இருப்பது ஆட்சியை கவிழ்க்கவே என்றும் அதற்கு அனைவரும் ஒன்று சேருமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் தான் பயங்கரவாதத்தை இல்லாது ஒழித்தால் அதனை எல்லோரும் தற்போது அனுபவிப்பதாவும் அதனை எண்ணி இன்று சத்தியகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அதன் பிரதிபலிப்பாக ஆட்சியை கவிழ்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*