;
Athirady Tamil News

மணப்பெண்ணாக நடிக்க சென்ற எனக்கு நேர்ந்த கதி: இளம்பெண்ணின் வாக்குமூலம்..!!

0

சீனாவில் 21 வயது இளம்பெண் ஒருவர் மணப்பெண்ணாக நடிக்க சென்ற இடத்தில் அவருக்கு உண்மையாகவே திருமணம் நடந்துள்ளது குறித்து தெரிவித்துள்ளார்.போலி திருமணத்தின்போது, இந்த பெண்ணும், மணமகனும் உண்மையான திருமண ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஒப்பனை கலைஞர் தொழிற்பயிற்சி பட்டியலை இவர் மே மாதம் பேஸ்புக் பக்கத்தில் பார்த்துள்ளார். அதற்கு இவர் விண்ணப்பித்துள்ளார். அந்த நிறுவனம், இவரை பயிற்சி வகுப்புக்கு அழைத்துள்ளது.

ஹாங்காங்கில் ஒரு வார இலவச பயிற்சி அளிக்கப்பட்ட அவரிடம், இந்த பயிற்சியில் வெற்றிபெற வேண்டுமானால், சீனாவின் பெருநிலப்பகுதியிலுள்ள ஃபூஜியான் மாகாணத்தில் நடைபெறும் போலி திருமணம் ஒன்றில் பங்கேற்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. .ஜூலை மாதம் உள்ளூர் அரசு மையத்தில் திருமண விண்ணப்ப ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த திருமணம் பின்னர் செல்லுபடியாகாமல் போய்விடும் என்று அவளிடம் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதன்பின்னர் தான் இவருக்கு தெரியவந்துள்ளது தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று.

தற்போது இந்த திருமணத்தில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளில் அவர் இறங்கியுள்ளார்.

இந்த குற்றம் இழைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சரியாக இல்லாததால் உள்ளூர் காவல்துறை உதவ முடியவில்லை. எனவே, ஹாங்காங் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை அணுகியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + two =

*