;
Athirady Tamil News

இளவரசர் ஹரியிடம் டயானாவின் மெய்க்காப்பாளர் வைத்த உருக்கமான கோரிக்கை..!!

0

மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் மெய்க்காப்பாளர் லீ சன்சம் இளவரசர் ஹரியிடம் உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இளவரசி டயானா மற்றும் அவரது இரு பிள்ளைகள் வில்லியம் மற்றும் ஹரி ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் ராணுவ வீரரான லீ சன்சம்.

கடும் நெருக்கடியான மெய்க்காப்பாளர் பணியால் தற்போது உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள லீ, இளவரசர் ஹரியுடன் இணைந்து செயல்பட கோரிக்கை வைத்துள்ளார்.

இதனால் தமக்கு ஏற்பட்டுள்ள இந்த நோய் குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில் இருந்து வெளியேறிய பின்னர், டயானாவின் மெய்க்காப்பாளர் பணிக்கு திரும்பிய லீ, இளவரசர் ஹரியுடன் தமக்கிருந்த உறவு பற்றி குறிப்பிட்டுள்ளார்

மட்டுமின்றி இளவரசர் ஹரியால் PTSD என அறியப்படும் இந்த நோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மட்டும் குறித்த நோயால் சுமார் 23 முன்னாள் ராணுவத்தினர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறும் லீ,அரசு உரிய கவனம் செலுத்த மறுப்பதாகவே கருதுவதாகவும் குற்றஞ்சாட்டினார். ஆனால் அரசு அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

உளவியல் ஆரோக்கியம் தொடர்பில் ஆண்டுக்கு 22 மில்லியன் பவுண்டுகள் அரசால் செலவிடப்படுவதாகவும், இந்த நோய் தொடர்பான உதவிக்கு 24 மணி நேரமும் இயங்கும் சேவை ஒன்றும் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 10 =

*