;
Athirady Tamil News

சாலையில் அராஜகம் செய்த இளம்பெண்: அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சி..!!

0

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் இளம்பெண் ஒருவர் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தியதோடு, ஓட்டுனரை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் Washington நகரத்தில் Bladensburg சாலையில், தவறாக கார் ஒட்டி வந்த பெண் ஒருவர், பேருந்துக்கு முன் பகுதியில் காரை நிறுத்தி விட்டு, பலமான ஆயுதம் மூலம் பேருந்தின் கண்ணாடியை உடைக்க முற்படுகிறார்.

பின்னர் தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்ப முயற்சிக்கும் போது, பேருந்து ஓட்டுநர் அவரது காரை மறைத்துக்கொண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்

ஆனால் இதனை பொருட்படுத்தாத அந்த பெண் வேகமாக காரை செலுத்தி, ஓட்டுனரை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து புறப்படுகிறார்.

இந்த சம்பவத்தில் ஓட்டுநருக்கு, கை மற்றும் கால் பகுதியில் லேசான காயங்கள் ஏற்பட்டது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் சம்பவத்தில் ஈடுபட்ட 20 வயதான Mariana Silver என்ற பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*