;
Athirady Tamil News

இளவரசர் ஹரியின் கையில் 20 வருடங்களாக இருக்கும் வளையம் பற்றிய ரகசியம்..!!

0

பிரித்தானிய இளவரசர் ஹரி தன்னுடைய கையில் கடந்த 20 வருடங்களாக அணிந்திருக்கும் வளையத்தியத்திற்கு பின்னர் ஒரு ரகசியம் இருப்பதாக கூறப்படுகிறது.

பிரித்தானிய இளவரசர் ஹரி தன்னுடைய மனைவி மெர்க்கலை காதலிக்க ஆரம்பித்த காலகாட்டத்தில், அவர்களை பற்றிய பல வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தன.

அதில் ஹரி தன்னுடைய கைகளில் அணிந்திருக்கும் மந்தமான நீல நிறத்திலான காப்பினை, ஒரு முறை மெர்க்கல் தன்னுடைய கைகளில் அணிந்திருந்திருப்பதை போன்ற புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்

இதுதொடர்பாக பல்வேறு வதந்திகள் அப்போது வெளிவந்தாலும், ஹரி தன்னுடைய கையில் கடந்த 20 வருடங்களாக அணிந்திருக்கும் மற்றொரு காப்பு குறித்த செய்திகளும் வெளிவந்த வண்ணமே உள்ளன

ஹரி அந்த காப்பினை அதிகமான முறை அணிந்திருப்பார். அதிலும், தான் கலந்து கொள்ள கூடிய முக்கியமான நிகழ்வுகளில் நிச்சயமாக அணிந்திருப்பார்

அவர் தன்னுடைய பள்ளி பருவத்தின் தேர்வு முடிவுகள் வெளியான சமயத்தில் கையில் அணிந்திருந்தார். அதேபோல மிகப்பெரிய போலோ போட்டிகள் நடைபெறும் பல நேரங்களில் அதனை தன்னுடைய கையில் அணிந்திருந்தார்

அவருடைய வாழ்க்கையிலே முக்கிமான நாள் என கருதப்பட்ட திருமண நாளன்றும் ஹரி அதனை அணிந்திருந்தார். சமீபத்தில் கூட விக்டோரியா அரண்மனையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியிலும் அவர் அணிந்திருந்தார்

இந்த காப்பினை, கடந்த 1997-ம் ஆண்டு தன்னுடைய தாய் டயானா இறந்ததற்கு பின்னர், ஆப்பிரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது வாங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன

இதேபோல அவரது அண்ணன் வில்லியம் கூட கையில் ஒரு சில்வர் காப்பினை அணிந்திருப்பார். ஆனால் அவர் முக்கியமான நிகழ்வு மட்டுமின்றி அதிகமான நிகழ்வுகளின் போதும் அணிந்திருப்பார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + nineteen =

*