;
Athirady Tamil News

படுக்கையில் சிறுநீர் கழித்த 81 வயது பாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர பேத்தி..!!

0

அமெரிக்காவில் படுக்கையில் சிறுநீர் கழித்த 81 வயது பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பேத்தியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

81 வயதான Helen Smith என்பவர் dementia நோயால் (மனச்சோர்வினால் ஏற்படும் ஒருவித பைத்தியம்) பாதிக்கப்பட்டிருந்தார். இவர் தனது 30 வயது பேத்தி Brandon Smith – டன் வசித்து வந்துள்ளார்.

தனது பாட்டி தங்களுடன் வசிப்பதை Brandon Smith விரும்பவில்லை. சம்பவம் நடைபெற்ற அன்று, பாட்டி தனது படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் கோபமடைந்த Brandon Smith தனது பாட்டியை குளியலறைக்கு அழைத்து சென்று அமரவைத்து சுத்தம் செய்துள்ளார்.

வயதான காலத்தில் எதற்காக இப்படி செய்கிறாய் என கன்னத்தில் அடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு கோபம் அடங்கவில்லை, இதனால் கத்தியை எடுத்துவந்து குளியலறையில் வைத்து தனது பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

கொலைசெய்துவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். தனது பாட்டி இறந்துகிடந்ததை பார்த்த மற்றொரு பேத்தி இதுகுறித்து பொலிசில் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் மூலம் பாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. இப்படி ஒரு கொடூர செயலை செய்த பேத்தியை பொலிசார் கைது செய்து அவர் மீது கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − eight =

*