;
Athirady Tamil News

வாக்காளர் இடாப்பு குறித்து மேன்முறையீட்டு காலம் இன்றுடன் நிறைவு..!!

0

2018ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக மேன்முறையீடு அல்லது எதிர்ப்புகள் தெரிவிக்க வழங்கப்பட்ட காலம் இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

அதன்படி இன்றைய தினத்திற்குள் மேன்முறையீடு அல்லது எதிர்ப்புகள் தெரிவிக்க முடியும் என்றும், இதன் பின்னர் 2018ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்புக்கான திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறினார்.

மாவட்ட தேர்தல் அலுவலகங்கள், கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் தபால் அலுவலகங்களில் வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நாளையதினம் முதல் பிரதேச செயலக அலுவலக மட்டத்தில் கிடைக்கப் பெற்றுள்ள மேன்முறையீடு மற்றும் எதிர்ப்புகள் தொடர்பில் பரிசோதனை செய்யப்படும் என்று அவர் கூறினார்.

அதன்பின்னர் ஒக்டோபர் மாதம் முதலிரு வாரங்களுக்குள் 2018ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக எம்.எம். மொஹமட் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − six =

*