;
Athirady Tamil News

மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தந்தை..!!

0

கிரிபாவ, சதகல பகுதியில் தந்தை தாக்கியதில் மகன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் காரணமாக தந்தை மண்வெட்டியால் அடுத்து மகனை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் கிரிபாவ, சதகல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

சம்பவத்தின் போது தந்தை மது அருந்தி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரான தந்தை குறித்த பகுதியில் இருந்து தப்பிச்சென்றுள்ளதுடன் கிரிபாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + eight =

*