;
Athirady Tamil News

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!!

0

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

கருணை அடிப்படையில் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் அதனை மத்திய அரசு நிராகரித்தது. 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் தமிழக அரசின் கோரிக்கை மனுவை நிராகரித்தார்.

ஜனாதிபதியின் நிராகரிப்பை எதிர்த்து பேரறிவாளன் உட்பட 7 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதேசமயம் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசும் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும், அரிசின் பரிந்துரையின்பேரில் ஆளுநர் இறுதி முடிவை எடுக்கலாம் என்றும் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் மத்திய அரசு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது.

எனவே, 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக ஆளுநரிடம் தமிழக அரசு ஏற்கனவே அளித்த மனு மீது ஆளுநர் விரைவில் முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − six =

*