;
Athirady Tamil News

வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டிவைப்பு..!! (படங்கள்)

0

வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டிவைப்பு – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பா.கஜதீபன் நாட்டி வைத்தார்

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் “செமட்ட செவன” திட்டத்தின் கீழ் ஏழாலையில் அமைக்கப்படவுள்ள 30 வீடுகள் கொண்ட வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று 06.08.2018 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் ஏழாலைமேற்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டு வீடுகளுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். மாகாணசபை உறுப்பினருடன் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் பொறியியலாளர், பிரதேச கிராம அலுவலர் ஆகியோரும் கலந்துகொண்டு அடிக்கற்களை நாட்டி வைத்தனர்.

நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினருடன், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் பொறியியலாளர், பிரதேச கிராம அலுவலர், பயனாளிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two − 1 =

*