;
Athirady Tamil News

இந்திய – இலங்கை உறவை வலுப்படுத்தும் வகையில் வவுனியாவில் பரதநாட்டிய பயிற்சிப்பட்டறையும் நடன நிகழ்வும்..!! (படங்கள்)

0

இந்திய, இலங்கை உறவுகளை வலுப்படுத்தும் வகையில் வவுனியாவில் பரத நாட்டிய பயிற்சிப் பட்டறையும், பரத நாட்டிய அளிக்கை நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

யாழ் இந்திய துணைத்தூதரகம், இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயம் மற்றும் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து வழங்கும் தெய்வீக சுகானுபம்-7 வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

கடந்த காலங்களைப் போன்று இவ்வாண்டும் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்தியாவின் பிரபல பரத நாட்டிய கலைஞர் நாட்டிய இளவரசி சிறிமதி ஊர்மிளா சத்தியநாராயணன் அவர்களும் அவர்களது குழுவினரும் இணைந்து பரத நாட்டிய பயிற்சிப் பட்டறை நடத்தியதுடன் நடன அளிக்கைகளையும் வழங்கினர்.

இவ் பயிற்சிப் பட்டறையில் வவுனியா தெற்கு மற்றும் வவுனியா வடக்கு வலய நடன ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாலை நிகழ்வாக நடன அளிக்கை இடம்பெற்றது.

இதில் இந்திய துணைத்தூதர் எஸ்.பாலசந்திரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, இ.இந்திரராஜா, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் க.சத்தியசீலன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, பிரபல வர்த்தகர் தம்பா, இந்திய துணைத்தூதரக அதிகாரி பிரபாகரன், கல்வித் திணைக்கள அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 − two =

*