;
Athirady Tamil News

இராணுவத்திரை பாராட்டிய மயிலிட்டி கலைமகள் மகாவித்தியால அதிபர்..!!

0

மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயத்தினை இராணுவத்தினர் விடுவித்தமையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என தெரிவித்தார் பாடசாலையின் அதிபர் திருமதி சண்முகநாதன் தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்

எமது பாடசாலை 200 ஆவது ஆண்டினை கொண்டாடும் இவ்வேளையில் இன்று(5) பாடசாலையை இராணுவத்தினர் விடுவித்தமையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்

1818.06.04 ஆம் திகதி டானியல்பூவர் என்பரால் அவரது தேவாலய விறாந்தையில் 35 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலை படிப்படியாக வளர்ச்சியடைந்து இடம்பெயர்ந்த காலத்தில் 1990.06.18 ஆம் திகதி. 877 மாணவர்களுடன் இயங்கிக்கொண்டிருந்தது. தற்போது சுன்னாகம் தொட்டிலாலடி சபாபதிப்பிள்ளை வீதியில் ஓர் பாலடைந்த கட்டடத்தில் 182 மாணவர்களுடன் எந்தவித அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருகின்றது. எமக்கு இந்த பாடசாலை காணி கிடைத்தமையிடுத்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் எதிர்காலத்தில்
இலங்கையில் உள்ள ஏனைய பாடசாலைகளில் உள்ளது போன்று அனைத்து வசதிகளையும் பெற்று எமது பாடசாலை ஊடாக தேசிய மட்ட பெறுபேறுகளிலும் போட்டிகளிலும் பங்குபெற்று மிளிர்வார்கள். எதிர்காலத்தில் ஒரு தேசிய பாடசாலையாக வளரவேண்டும் என்பதே எனது அவாவாகும் . என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 8 =

*