;
Athirady Tamil News

சக்தி எப்எம் வானொலியின் நல்லூர் திருவிழாக் காலக் கலையகம் திறந்துவைப்பு..!! (படங்கள்)

0

சக்தி எப்எம் வானொலியின் நல்லூர் உற்சவகாலக் கலையகம் இன்று ஆலயத்தின் முன்பாக உள்ள பருத்தித்துறை வீதியில் திறந்து வைக்கப்பட்டது. சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்ற நிகழ்வின்போது விநாயகர் பூசை இடம்பெற்ற பின்னர் கலையகம் திறந்து வைக்கப்பட்டது.

சக்தி எப்எம் வானொலியின் ஊடகப் பிரதானி பி.அபர்ணாசுதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் ப.புஷ்ணபரட்ணம், விரிவுரையாளர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன், டாக்டர் ச.அறிவுச்செல்வன் மற்றும் சக்தி எப்எம், சக்தி ரிவி, நியுஸ் பெஸ்ட் ஊடகக் குழுவினர் மற்றும் சக்தியின் இரசிகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − fifteen =

*