;
Athirady Tamil News

உத்தரகாண்ட்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் பலி, 21 பேர் படுகாயம்..!!

0

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டம் மோகன்ரி மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை தடுமாறி அங்கிருந்த 50 அடி பள்ளத்தில் விழுந்தது.

இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 21-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகாமையிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் மீட்புப்படையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை கவனித்து வருகின்றனர்.

பத்ரோக்ஜன் – பிகியாசன் சாலையில் நடைபெற்ற இந்த விபத்தை தொடர்ந்து அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*