;
Athirady Tamil News

பூனாவையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வாகனம் மோதியதில் இளைஞன் படுகாயம்..!! (படங்கள்)

0

பூனாவையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் (06) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதவாச்சியிலிருந்து வவுனியா நோக்கி வந்த தேசிய வீடடைப்பு அதிகார சபைக்கு சொந்தமான வாகனம், எதிர்திசையில் மதவாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பூனாவை பிரபோதகம பகுதியில் வைத்து மோதியதனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் தூக்கி வீசப்பட்டதுடன் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.

குறித்த விபத்தில் லக்சான் என்ற 21 வயதுடைய இளைஞனே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × two =

*